18 Dec 2015

Inimey Ippadithan Song Review / "இனிமே இப்படித்தான்" பாடல் விமர்சனம்






தலைப்பு: இனிமே இப்படித்தான்
பாடியவர்கள்: என்.எம் லிங்கேஸ்
சொல்லிசை (rap) பாடியவர்கள்: மிஷ்ட வீ
பாடல் வரிகள்: என்.எம் லிங்கேஸ் & மிஷ்ட வீ
இசையமைப்பாளர்: நவீன் க்ரவணா , எக்ஸ்ட்ரீம் ஸ்டுடியோ

பல சிறந்த பாடல்களை வழங்கிய நம் நாட்டு கலைஞர் என்.எம் லிங்கேஸ், மறுபடியும் நம் செவிக்கு இனிமையூட்டும் வகையில் இனிமே இப்படிதான் என்றே மிக சிறந்த பாடலை வழங்கியுள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் பாடும் பாடல் மிக சிறப்பாக அமைதுள்ளனவே என்று கூறலாம். அது மட்டுமின்றி, இனிமே இப்படித்தான் பாடலை தமது மற்ற சிறந்த படைப்பை விட இப்பாடலை இன்னும் பல மடங்கு நாம் வியங்கும் அளவுக்கு பாடி இருக்கிறார் என்றே கூற வேண்டும்.

டேச்னோ சார்ந்த இசை, குறிப்பாக இப்பாடலில் இணைக்கப்பட்ட சேர்ந்திசை (chorus), இப்பாடலுக்கு சுறுசுறுப்பை மெருகூட்டியுள்ளது. அதுமட்டும்மின்றி, இப்பாடல் அனைவரையும் செவியையும் மனதையும் கவருமளவுக்கு அமைக்கபட்டுள்ளது. இனிமே இப்படிதான் பாடலின் சேர்ந்திசை பகுதிகள் நம்மை இப்பாடலை எந்நேரமும் முனுமுனுக்க வைக்கின்றன என்பததில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இப்பாடலில் வரும் வரிகளிலுள்ள ஒரு வாக்கியத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலவையில் இரட்டை மொழி பேசும் விதம், நகரத்தில் வாழும் நம் மலேசிய இந்தியரின் பேசும் வழக்கத்தையும் கையாண்டுள்ளனர். இனிமே இப்படித்தான் பாடல் வரிகள் நாம் அனைவரும் சுலபமாக புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிதான மற்றும் வெவ்வேறு வயதுடைய அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதபட்டுள்ளது.

இப்பாடலில் இணைக்கப்பட்ட சொல்லிசை எப்பொழுதும் நம் மலேசிய இந்திய இசை துறையில் முத்திரையை பதித்து வருகின்றது. சொல்லிசை, இது இசை மட்டுமல்ல; நமக்கும் நமது கலைஞர்களுக்கும் கிடைத்த பெருமையும் கூட.

சுருக்கமாக சொன்னால் இப்பாடல் ஒரு அற்புதமான படைப்பு என்றே சொல்ல வேண்டும். இந்த மிகச் சிறந்த பாடலை வெளியீடு செய்து தான் பாடல் கலையின் மீது கொண்டுள்ள அன்பையும் முயற்சியும் வெளிக்காட்டியுள்ளார் நமது என்.எம் லிங்கேஸ்.

மண்ணின் மைந்தன் மலேசியா என்.எம் லிங்கேஸ் மற்றும் அவரது குழுவினரின் எதிகால திட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளை இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறது.



This is by far one of the best songs delivered by our brother NM Linges. He simply gets better each time & exhibited fantabulous singing in this song.

The techno based music was rather peppy and catchy, especially the chorus sections. The chorus portions will definitely get you humming the tune & swaying along.

Using a mixture of English & Tamil for the lyrics of resembled our Malaysian Indian urbanite culture of speaking dual language in one sentence. The lyrics was equally simple & straightforward, definitely understood across different ages.

Having rap portions incorporated into songs has always been our Malaysian Indian music industry's signature. It will always be our pride to be the pioneers in this.

In short, fantabulous team effort in producing such an exciting piece of art.

We extend our best wishes to our mannin mainthan NM Linges & team for all their future projects & endeavours.


Article By: Ms. Tavetha Tannarsu (Mannin Mainthan Malaysia)

Tamil Chat

0 comments:

Post a Comment